பிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை! 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்!!

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் ஜூன் 18 ரயிலில் சென்றுள்ளார். ஆபேர் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வரும்போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவக்கப்பட்டது.செவிலியர்கள், காவலர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் என சுமார் 15 பேர் அப்பெண்ணிற்கு உதவினர். இதற்காக, இருபுறங்களில் செல்லும் ரயில்கள் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. காலை 11.40 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.தாயும் குழந்தையும் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, ரயிலில் பிறந்த குழந்தைக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது. அந்தக் குழந்தை தனது 25 வயது வரை ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.இது குறித்து சமூக வலைதளங்களில் தாய்க்கும் பிள்ளைக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here