மிஸ் இந்தியா அழகிப்போட்டி! சென்னை பெண் பட்டம் வென்றார்!!

சென்னை: சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி மும்பையில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். பிரெஞ்சு மொழிப்பாடத்தில் பிஏ படித்துவருகிறார் இவர்.பலசுற்றுப்போட்டிகளில் பங்கேற்ற அவர் இந்திய அழகி பட்டம் வென்றார். உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஜில்லார் மிஸ் இந்தியா வெற்றி கிரீடத்தை அனுகீர்த்திக்கு சூட்டி வாழ்த்தினார்.அனுகீர்த்தி தனது பரிசு குறித்து கூறுகையில், சிறந்த மாடலாக வேண்டும்என்பதே தனது விருப்பம். மிஸ் இந்தியாவில் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.எனது வாழ்வின் எதிர்பாராத தருணங்களில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தார். தாயால் வளர்க்கப்பட்டு வரும் இவர், பிரெஞ்சில் பட்டம் முடித்து மொழிபெயர்ப்பாளர் ஆகவேண்டும் என்ற தாயின் லட்சியத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.ஒவ்வொரு தினத்தையும் சிறப்பாக திட்டமிட்டு வாழ்ந்தால், அடுத்துவரும் தினம் சிறப்பாக அமையும். வாழ்க்கை இனிதாகும் என்று கூறியுள்ளார் அனுகீர்த்தி.இந்தப் போட்டியில் இரண்டாவது இடம் ஹரியாணா மா நிலத்தைச் சேர்ந்த மீனாட்சி சவுந்திரி பெற்றார்.மிஸ் இந்தியா நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோக்கர், நடிகருமான ஆயுஷ்மான் குரானா தொகுத்து வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here