9 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்! கைவிட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!!

டெல்லி: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்குதல் திட்டத்திற்கு மறுத்து வருகின்றனர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கூறி வருகின்றனர்.இந்த திட்டத்தை செயல் படுத்த கடந்த 9 நாட்களாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 3 அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.டெல்லி உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார் எனவும் கேள்வி எழுப்பியது.இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து கெஜ்ரிவால் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here