கர்நாடக முதல்வருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்!

சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது அமைச்சர் ஜெயக்குமார்: காவிரி விவகாரத்தில் இனி கட்டப் பஞ்சாயத்து தேவையில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய முழு பொறுப்பும், கடமையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உண்டு. இதில், மாநில அரசின் பங்கை விட ஆணையத்தின் பங்கு தான் அதிகம்.காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும் என நம்பிக்கை உள்ளது. குமாரசாமியோ, நாராயணசாமியோ எந்த சாமியும் ஆணையிட முடியாது. பிரதான சாமி காவிரி மேலாண்மை ஆணையம் தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான் அருள்வாக்கு.காவிரி பங்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வர் சீன் போடலாம். அதனால் ஒரு பிரயோஜனமும் கர்நாடகத்திற்கு ஏற்படாது.திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:காவிரி பங்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வர் தற்போதுவைக்கும் வாதங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் வைக்கப்பட்டவை.
அவை விவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவை. காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதிகளை நியமிக்காமல் 20நாட்களுக்கும் மேல் கர்நாடக அரசு தாமதிக்கிறது.

தற்போது பிரதமரிடம் உச்சநீதிமன்றத்தை சில விளக்கங்களுக்காக நாடவுள்ளதாக கோரிக்கை விடுத்துள்ளது. இரு மாநிலத்தவர்களும் உடன்பிறவா சகோதரர்கள் என்று கூறிக்கொண்டே காவிரி விஷயத்தில் எதிர்மறை அணுகுமுறையை கையாள்கிறார் முதல்வர் குமாரசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here