சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து!

ரஷ்யா: ரஷியாவில் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத இருக்கின்றன.இந்தப் போட்டியில் சவுதி அரேபியாவும் பங்கேற்றுள்ளது. ரஷ்யாவுடன் நடந்த முதல் போட்டியில் சவுதி அணி தோல்வி அடைந்தது.ரோஸ்டோவ் நகரில் உருகுவே அணியுடன் சவுதி அரேபியா நாளை விளையாட உள்ளது. இதற்காக ரோஸ்டோவ் நகருக்கு சவுதி வீரர்கள் இன்று அதிகாலை விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர்.நடுவானில் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விளையாட்டு வீரர்கள் பத்திரமாக வெளியேறினர். பறவை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here