எட்டு வழி பசுமைச்சாலை திட்டம்! மத்திய அரசு மீது சந்தேகநிழல்!!

சேலம்:சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு தற்போது 4நெடுஞ்சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் சென்னை சென்றடைய சுமார் 6மணிநேரம் பிடிக்கிறது.சென்னைப் பயணத்தை இரண்டரை மணி நேரம் குறைப்பதற்காக அதாவது மூன்றரை மணி நேரத்தில் அடைந்துவிட எட்டுவழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது.  இதற்காக ரூ.10ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
பசுமைச்சாலைக்கு 1900ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
49ஹெக்டேர் வனநிலத்தில் தார் ஊற்றப்படுகிறது.
மக்கள், விவசாயிகள், சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு பெறப்படுகிறது.
எத்தனை எதிர்ப்பு வந்தாலும், இத்திட்டத்தை நிறைவேற்றுவேன் என்ற உறுதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிகிறது.இந்நெடுஞ்சாலை திட்டத்தை முன்னெடுத்ததே எடப்பாடி பழனிச்சாமி என்று கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி25ம் தேதி இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
இத்தகைய மெகா திட்டம் குறித்து உயரதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினாரா என்பது குறித்து செய்திகள் ஏதும் வெளிவரவில்லை. தமிழகத்தில் முதன்முறையாக எட்டுவழி பசுமைச்சாலை அமைப்பது குறித்து பிப்ரவரி 26ம் தேதி முதல்வரும், மத்திய அமைச்சர் கட்கரியும் இணைந்து பேட்டியளித்தனர்.
274கிலோமீட்டர் தூரமுள்ள இச்சாலைத்திட்டம் ரூ.10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
2மாதங்களில் இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படுகின்றன.எட்டுவழிச்சாலை திட்டத்தை இத்தனை வேகமாக அறிவித்து நடைமுறைப்படுத்துவது மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசின் மீதும் சந்தேகம் கொள்ளவைக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்கள் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல்பெற்று அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் மாநில அரசின் கடிதம் கிடைத்ததும் மத்திய அரசு இப்பெரிய திட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடுகிறது என்றால் அது சந்தேகத்தை தீவிரமடையவைக்கிறது.ஆறுகள் மணலின்றி மலடாகி வரும்வேளையில், ஒருவேளை சோற்றுக்காவது உதவிவந்த விளைநிலத்தை உயிராய் கருதி வாழும் மக்கள் நிலத்தை கொடுத்து தருவதைப்பெற்று வெளியேறு என்று விரட்டப்படுகின்றனர்.
இது எத்தனை பெரிய சோகம் என்று விவசாய குடும்பத்தில் பிறந்த, பசுமைபோர்த்திய வெளியில் வளர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சொல்லித்தெரியவைக்க வேண்டியதில்லை.

பசுமையை அழித்து பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு சேலம்-சென்னையை இணைக்கும் 4சாலைகளில் ஒன்றை சிக்கனமாக ரூ.ஆயிரம் கோடியில் மேம்படுத்தி 3மணி நேரத்தில் சேலம் மக்களை சென்னைக்கு செல்லவைக்கலாம். சதாப்தி போன்ற விரைவுரயிலை அறிமுகப்படுத்தி சேலம்-சென்னை பயணநேரத்தை குறைக்கலாம்.
தனது மாவட்டத்தில் உள்ள ஏழைவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டத்தை முதல்வர் கைவிடவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here