வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ. 45 லட்சம் கொள்ளை!

புவனேஷ்வர்: இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கிளை ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இயங்கி வருகிறது. இன்று காலை துப்பாக்கியுடன் 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்துள்ளது.துப்பாக்கி முனையில் வங்கியில் இருந்த ரூ. 45 லட்சத்தை கொள்ளை கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிட்டது.இது குறித்து வங்கி அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவிதுள்ளனர். விரைந்து சென்ற போலீசார் விசாரணையை மேற்கொண்டார்கள்.மேலும் வங்கி இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் ஆயுதம் தாங்கிய கும்பல் வங்கியில் கொள்ளையடித்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here