Connect with us

National

காவலர் தேர்வில் முறைகேடு! 19 பேர் கைது!!

Published

on

உத்தரப் பிரதேசத்தில் 42 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 860 மையங்களில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதற்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். காவல்துறையின் தீவிர சோதனையில் தொழில்நுட்ப உதவியுடன் தேர்வில் நடைபெறவிருந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட்டது.போலியான ஆவணங்கள் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலுக்கு ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கோரக்பூரில் 11 பேரும் அலகாபாத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டனர். மோசடிக் கும்பலின் தலைமையைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.தேர்வு மையங்களிலும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனில் கிரி என்பவர் தேர்வர்களுக்கு வெளியிலிருந்து பதில்களைச் சொல்வதாக ஒப்புக்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து போலீஸ் கான்ஸ்டபிள் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator