ஆச்சர்யமும் இல்லை! அதிர்ச்சியும் இல்லை!!

ஸ்ரீநகர்:ஜம்முகாஷ்மீரில் மக்கள் ஜனநாயகட்சி, பாஜக இணைந்து கூட்டணி அரசு அமைத்திருந்தன.
கூட்டணியில் இருந்து விலகியதாக பாஜக அறிவித்தது. இதுகுறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியது.முதல்வர் மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
அவர் கடிதம் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.
ராஜினாமாவுக்குப்பின்னர் மெகபூபா அளித்த பேட்டி விபரம்:பாஜக கூட்டணியை முறித்ததிலும், முதல்வர் பதவி இழந்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமும், அதிர்ச்சியும் இல்லை. அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை.
மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.
இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை எங்கள் அரசில்தான் நடந்துள்ளன.புதிய கூட்டணி அமைத்து ஆட்சியை தொடர முயற்சிக்கவில்லை.
காஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும்.
பலப்பிரயோகம் மிக்க பாதுகாப்பு கொள்கை ஜம்மு காஷ்மீரில் உதவாது.
இதனைத்தான் எப்போதும் நாங்கள் வலியுறுத்திவருகிறோம். சமரசமும், பேச்சுவார்த்தையையும் உடைய கொள்கையே தீர்வைத்தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here