ஓடும் காரில் மேக்கப் போட்டதால் விபரீதம்! பெண்ணின் கண்ணில் சொருகிய பென்சில்!!

பாங்காங்: தாய்லாந்தில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் உறவினரின் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றார். அவரின் காரை டிரைவர் ஓட்டினார். காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் தனது புருவத்தை பென்சிலிலால் அழகு படுத்தி கொண்டிருந்தார்.அவர் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராமல் முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளது. அதனால் இதனால் பென்சிலால் கண் மை போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் இடது கண்ணுக்குள் அந்த பென்சில் குத்தி சொருகி கொண்டது.உடனடியாக அந்த பெண்ணை வேறொரு காரில் அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அவருடைய கண்ணில் இருந்து அந்த பென்சிலை அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கண் பார்வை பாதிக்கப்படவில்லை. எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here