ஜெயலலிதா கொள்ளையடித்தார்! தினகரன் பங்குவைத்தார்!!

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் மேற்கொண்டார். பதவி ஆசை காட்டி 18 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் அவர் இழுத்துக் கொண்டார்.ஸ்டாலினை முதல்வராகவும், தினகரனை துணை முதல்வராகவும் உருவாக்க திட்டம் தீட்டினர். அதுவும் நிறைவேறவில்லை. இதனால் சபாநயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விடவேண்டும் என டி.டி.வி. தினகரன் மற்றும் ஸ்டாலின் துடித்து வருகின்றனர்.
தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 பேரும் எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா தயவால் உருவாக்கப்பட்டனர். அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களும் பெற்றுக் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு அமைச்சர் பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவரை சந்தித்தோம், அவர் இட்லி சாப்பிட்டார் என்று கூறிவந்தது பொய் என்று பேசி ஏற்கனவே அமைச்சர் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here