ஈரோடு அரசுப்பேருந்தில் இந்தியில் பெயர் பலகை!

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் இயங்கிவரும் 17-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப்பலகையில் பெருந்துறை மார்க்கெட் என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருந்தது. இது தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பா? என சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.மத்தியில ஆழும் அரசானது ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்கிற போக்கில் இருக்கிறது. இந்தியை தமிழகப் பேருந்துகளின் பெயர்ப் பலகையில் திணிக்க ஆளும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ என பொதுமக்கள் கூறுகின்றனர்.போக்குவரத்து வட்டாரங்கள் இதுகுறித்து தெரவித்துள்ளது. வலைதளங்களில் பரவி வரும் பெயர்ப் பலகைகொண்ட அந்தப் பேருந்தானது பெருந்துறை சிப்காட் பகுதியிலிருந்து மார்க்கெட் பகுதிக்குச் சென்று வருகிறது. இந்த பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.பெருந்துறையில் ஞாயிறுதோறும் வாரச் சந்தை நடக்கும். சந்தைக்கு சிப்காட்டைச் சுற்றியுள்ள வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வார்கள். மற்றபடி அந்தப் பேருந்தில் இந்தி மட்டுமல்ல தமிழும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரத்துக்குப் பிறகு அந்த இந்திப் பெயர்ப் பலகையும் அகற்றப்பட்டுவிட்டது என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here