குளத்தில் கார் கவிழ்ந்து 6 சிறுவர்கள் பலி!

அராரியா: அராரியா மாவட்டத்தில் தரபாடி என்ற பகுதியில் 7 சிறுவர்களுடன் காரை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குளத்தில் பாய்ந்தது.சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் காரின் உள்ளே இருந்தவர்களை மீட்க முயன்றுள்ளனர்.
அதற்குள் கார் நீரில் மூழ்கி சிறுவர்கள் 6பேர் உயிரிழந்து விட்டனர். ஒரு சிறுவனை உயிருடன் மீட்டுள்ளனர். சிகிச்சைக்காக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கார் கதவுகளைத் திறக்க முடியாததால் சிறுவர்கள் காருக்குள் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here