பாஜக ஆதரவு திடீர் வாபஸ்!! ஜம்முகாஷ்மீர் முதல்வர் ராஜினாமா!!

ஸ்ரீநகர்: பாஜக கூட்டணி ஆட்சி ஜம்முகாஷ்மீரில் கவிழ்கிறது. பிடிபி கட்சிக்கு பாஜக அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதனால் மகபூபா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் நயீம் அக்தரிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.ஜம்மு காஷ்மீரில் 2015ல் பிடிபி கட்சி – பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பிடிபி தலைவர் முப்தி முகம்மதுசயீத் முதல்வராகவும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் சிங் பொறுப்பேற்றனர். முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முதல்வரானார்.
காஷ்மீரில் அமைதி திரும்ப பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் மேலும் பல விஷயங்களிலும் கூட்டணிகட்சிகளிடம் கருத்து மோதல் இருந்துவந்தது. ரம்ஜான் பண்டிகைக்காக காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.அதனை தொடரவேண்டுமென மகபூபா தொடர்ந்து வலியுறுத்திவந்தார். ஆனால், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் வேட்டை தொடரும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இதுதொடர்பாக வெளிப்படையாகஅறிவித்துவிட்டார்.
இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அம்மாநில தலைவர்கள், மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முதல்வர் முப்திமுகமது தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
87 இடங்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பிடிபி- 28, பாஜக- 25, தேசிய மாநாட்டுக்கட்சி- 15, காங்கிரஸ்- 12, பிறகட்சிகள்- 7 என்பதாக கட்சிகளின் பலம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here