ஏடிஏம் மிஷினில் எலி நடத்திய வேட்டை! ரூ.12 லட்சம் வீண்!!

கவுகாத்தி: கடந்த ஒரு மாதமாக அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த எஸ்.பி.ஐ வங்கியின் ஏ.டி.எம் வேலை செய்யவில்லை.பழுதான ஏ.டி.எம் மிஷினை சரிசெய்ய ஜூன் 11ம் தேதி வங்கி நிர்வாகம் ஆட்களை அனுப்பியுள்ளது. ஏ.டி.எம்மை ஊழியர்கள் திறந்து பார்த்தனர். ஊழியர்கள் அதிர்ந்து போயினர்.ஏ.டி.எம்முக்குள் புகுந்த எலி மெஷினில் நிரப்பப்பட்டிருந்த 2000, 500 ரூபாய் நோட்டுகளை கடித்து குதறியிருந்தது.எலி நடத்திய வேட்டையில் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here