டிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவோரின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு அவரது மனைவி மெலானியா டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகிறார். அதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடும்பமாக நுழைபவர்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கடந்த 6 வார காலங்களில் மட்டும் இதுபோன்று 2 ஆயிரம் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.
அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. குடும்பங்கள் பிரிக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான சிறார்களும் தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியாவும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். “குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுவதை பார்க்க வெறுக்கிறேன்.ஒரு வெற்றிகரமான குடியேற்ற சீர்திருத்தத்தை விரும்புகிறேன்,” என மெலானியா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் முதல் குடிமகளான லாரா புஷ், குழந்தைகளை பெற்றோர்களிடம் இருந்து பிரிப்பது ஒழுக்கமற்றது என விமர்சனம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here