மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்! பாஜக, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு!!

டெல்லி: 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்க காங்கிரஸ் நினைக்கிறது. பிராந்திய கட்சிகள் இணைந்த மூன்றாவது அணி அமையவேண்டுமென்று மம்தா நினைக்கிறார். இந்நிலையில் டெல்லியில் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள் தங்கள் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து
ஆலோசித்துள்ளனர்.தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைகோர்க்க திட்டமிட்டுள்ளனர்.மாநில கட்சிகளின் கொடி டெல்லிகோட்டையில் பறக்கும்விதமாக மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தங்கள் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்தவுள்ளனர்.பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.
தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவர் குரியனின் பதவிக்காலம் ஜூன்30ல் முடிவடைகிறது. மாநிலங்களவையில் உள்ள 245உறுப்பினர்களில் பாஜக-69, காங்-51, பிறகட்சிகள்-125 என்ற பலத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here