Connect with us

Business

பெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது!

Published

on

டெல்லி:பெட்ரோல், டீசல் உற்பத்திவரி குறைக்கப்பட மாட்டாதுஎன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் வரி-ஜிடிபி விகிதாச்சாரம் 10%லிருந்து 11.5% ஆக அதிகரித்துள்ளது.
அதில்பாதியளவுக்கு பங்களிப்பு செலுத்தியுள்ளது பெட்ரோலியப்பொருட்கள் வரியே ஆகும்.
ஜிடிபியின் 0.72% பெட்ரோலியப் பொருட்கள் வரி உள்ளது.பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனை“ பொறியில் சிக்கும் ஆலோசனை” என்று மறைமுகமாக அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார். அதனை சிதம்பரம் ஏன் செய்யவில்லை என்றும் கேட்டுள்ளார்.

எண்ணெய் அல்லாத வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே. மக்கள் நேர்மையாக வரிகளைச் செலுத்தினால் பெட்ரோலியப் பொருட்கள் மீதான அதிகவரிவிதிப்பை நம்பியிருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator