லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்!

சென்னை: அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுகுமார் கூட்டாகச் சேர்ந்து ஜூன் 8ஆம் தேதி வெளியிட்டுள்ளனர்.அதில் மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த ஆறு மாதங்களில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணமும் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சுங்கச்சாவடிக் கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.டீசல் விலையைக் குறைக்க அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். 3ஆவது நபர் காப்பீட்டுத் தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.இந்தக் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம்.எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here