கேரளாவில் பேட்டரியில் இயங்கும் பேருந்து அறிமுகம்!

கேரள: கேரள அரசு இன்று சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் விதத்தில் பேட்டரியில் இயங்கும் நவீன பேருந்தை அறிமுகம் செய்துள்ளது. மாநில போக்குவரத்து அமைச்சர் டொமின் தச்சன்காரி திருவனந்தபுரத்தில் பேருந்தின் முதல் பயணத்தை தொடங்கி வைத்தார்.350 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை இயக்குவதற்கு 5 மணிநேரம் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். 35 இருக்கைகள் உள்ள இந்த பேருந்து முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி திறக்கும் வசதிகள் என பாதுகாப்பு ஏற்பாடுகளும் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் தங்களது 3 சக்கர நாற்காலியுடன் சிரமமின்றி இந்த பேருந்தில் பயணிக்கலாம்,இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்துதுறை அமைச்சர் டோமின் தஞ்சன்காரி கூறுகையில் சோதனை அடிப்படையில் இந்த பேருந்தை இயக்கியுள்ளோம். அடுத்த 6 மாதங்களுக்குள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் 300 பேருந்துகளை இயக்கவுள்ளோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here