நிரவ் மோடியிடம் 6 பாஸ்போர்ட்டுகள்! சிபிஐ திண்டாட்டம்!!

புதுடில்லி: வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.இது குறித்து நிரவ் மோடி மீதும் அவரது உறவினர் உறவினர் மெஹுல் சோக்சி மீதும் சி.பி.ஐ அமலாக்கத் துறையினர்
வழக்கு தொடர்ந்து உள்ளன.வெளிநாட்டில் இருந்தபடியே பெல்ஜியம் நாட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாக உளவுதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.விசாரணையில் நிரவ் மோடி 6 பாஸ்போர்ட் வைத்திருப்பதும், அதில் 2 பாஸ்போர்ட்டுகளை மட்டும் பயன்பாட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.இரு பாஸ்போர்ட்டுகளையும் இந்திய அரசு முடக்கியுள்ளது. வெளிநாடுகளில் அவரது பாஸ்போர்ட்டை முடக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நிரவ் பல நாடுகளுக்கு சென்று வருவது தெரியவந்துள்ளது.நிரவ் மோடிக்கு எதிராக ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் வைத்துள்ளதற்காக சி.பி.ஐ அதிகாரிகள் எப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here