பெண் பயணியை காலால் எட்டி உதைத்தார் ஓட்டுனர்! போலீசார் விசாரணை!!

ஈரோடு: பத்மாவதி கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். ஈரோடு நகரப் பேருந்தில் தனது உறவினரான கர்ப்பிணி பெண்ணை உடன் அழைத்து சென்றுள்ளார்.பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியுள்ளார். கர்ப்பிணிப் பெண் இறங்குவதற்கு முன்பாக பேருந்தை இயக்கியுள்ளார் ஓட்டுனர். அதனால் கர்ப்பியணிப்பெண் நிலை தடுமாறியுள்ளார்.பத்மாவதி ஓட்டுனரிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஓட்டுனர் சின்னசாமி பத்மாவதியை எட்டி உதைத்துள்ளார்.பத்மாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here