பொம்மை துப்பாக்கி என நினைத்து தாயை சுட்டது குழந்தை!

மேற்குவங்காளம்: ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது கானக்கோல் என்ற கிராமம்.
அங்கு வசித்துவரும் காகோலி ஜனா என்ற பெண் வீட்டுத்தோட்டத்தில் துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்தார்.அதனை பொம்மைத்துப்பாக்கி எனக்கருதி தனது 7வயது குழந்தையிடம் விளையாட கொடுத்தார். குழந்தை விளையாட்டாக தாய் மீது சுட்டுள்ளது.அந்த துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டுகள் காகோலி ஜனாவின் தோள்பட்டை, மார்புப்பகுதியில் காயம் ஏற்படுத்தின. ரத்தவெள்ளத்தில் அலறியபடியே விழுந்தார் ஜனா.அவர் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். ஜனாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்குப்போராடி வருகிறார். கைத்துப்பாக்கியை குண்டுகளுடன் தோட்டத்தில் வீசிச்சென்றது யார் என்று போலீசார்
விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here