துபாய் சுற்றுலாவிற்கு 48 மணி நேர இலவச பயண விசா!

துபாய்: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்றுள்ளனர்.ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுலா செல்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியர்கள். இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு 48 மணி நேர இலவச பயண விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசரமாக செல்பவர்களுக்கும், பட்ஜட் போட்டு அமீரகம் செல்வோருக்கும் இந்த புதிய நடைமுறை பயனுள்ளதாக இருக்கும்.48 மணி நேரம் தவிர மேலும் தங்குவதற்கு தேவைப்பட்டால் இந்திய மதிப்பில் 930 ரூபாய் செலுத்தி பயணி விசாவின் நேரத்தை மேலும் 96 மணி நேரமாக நீட்டித்துக் கொள்ளமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here