உணவை வீணாக்கியதால் தகராறு! ரயிலில் இருந்து தள்ளி தம்பதி கொலை!!

உத்தரப்பிரதேசம்: பாரத்பூரை சேர்ந்த தம்பதி ஜக்கோ-சகுந்தலா.இவர்கள் லால்வத்ரா நகருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தனர்.அவர்களுடன் கவுரவ் என்ற வாலிபரும் உடன்வந்தார்.உணவுநேரம் நெருங்கியதும், தம்பதிகள் தாங்கள் எடுத்துவந்திருந்த ரொட்டியை
சாப்பிட தொடங்கினர். கவுரவுக்கும் 2சப்பாத்தி கொடுத்தனர்.அதில் ஒன்றை சாப்பிட்ட கவுர்வ் மற்றொன்றை வீசிவிட்டார்.இதனால் ஜக்கோவுக்கும், கவுரவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். கவுரவ் உணவு கொடுத்த ஜக்கோவை ஓடும்ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
அபாய சங்கிலியை பிடித்து இழுக்கமுயன்ற சகுந்தலாவையும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனைதடுக்க முயன்ற மற்றொரு பயணியையும் தாக்கினார் கவுரவ்.
நாகர்நகர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது சகபயணி போலீசில் புகார் செய்தார். கவுரவ் கைதுசெய்யப்பட்டார். ஜக்கோ, சகுந்தலா உடல்களை போலீசார் மீட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here