காவிரிநீர் பங்கீடு! குமாரசாமி புதிய போர்க்கொடி!!

டெல்லி:காவிரி நீர் பங்கீடு குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி புதிய போர்க்கொடி தூக்கியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார் குமாரசாமி.
கூட்டத்துக்குப்பின் பிரதமர், உள்துறை அமைச்சர், சாலைமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாரியத்துக்கு 2பிரதிநிதிகள் கர்நாடகா சார்பில் நியமிக்கவேண்டும். அதுகுறித்து மத்திய அரசு நினைவூட்டியது. விரைவில் அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் பணிகள் கர்நாடக அரசின் சுதந்திரத்தில் தலையிடுகிறது. பத்துநாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் இருப்பை அளவிடவேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீரை விடுவிக்க வேண்டும்.விவசாயிகள் இத்தனை பாசனப்பரப்பில் இன்னின்ன விளைவிக்கவேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இதனை எப்படி ஏற்பது? இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாக உள்ளது.

நில அமைப்புப்படி தண்ணீரை திறந்துவிடும் இடத்தில் உள்ள நமக்கு கூடுதல் உரிமை இருக்கவேண்டும் என்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.கர்நாடகா அணையில் நீரை திறந்துவிடுகிறோம். தமிழக அணைகள் நிரம்புகின்றன. அங்கும் மழைபெய்தால் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இதனால் இரு மாநில விவசாயிகளுக்கும் லாபம் இல்லை. எனவே இதுதொடர்பான விசயங்கள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றேன்.இப்பிரச்சனைகள் குறித்து பேசித்தீர்க்கலாம் என்று மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு முதல்வர் குமாரசாமி பேட்டியின்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here