Connect with us

Cinema

பிக்பாஸ்2 விஷம் நடிகை இவர்தான்!

Published

on

சென்னை:பிக்பாஸ் சீசன்2வில் பிரபல நடிகைக்கு ‘விஷம்’ என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலக்க வைக்கவும், பெண்களிடம் அர்ச்சனை பெறுவதற்காகவுமே பாலாஜி, சென்றாயன் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் முரட்டுக்காளை பொன்னம்பலமும் அலம்பலுக்கு இடம்பெற்றுள்ளார்.
சென்றாயனுக்கு ஜனனி விட்ட சவாலை மும்தாஜ் முன்னால் ஆடிப்பாடி நிறைவேற்றுகிறார் பொன்னம்பலம்.மும்தாஜின் பிரபலமான மலை..மலை…. பாடலை அவர் முன்னால் ஆடிப்பாடு பார்ப்போம் என்று ஜனனி சவால் விடுத்துள்ளார்.
அப்போது அங்கே வந்த மும்தாஜ் முன்னால் நடனமாட சென்றாயன் தயங்குகிறார். ஆனால், பொன்னம்பலம் சவாலை ஏற்று மும்தாஜை கலாய்க்கிறார். அவரை முறைத்துக்கொண்டு செல்கிறார் மும்தாஜ்.
ஜனனிக்கு ‘விஷம்’ என்ற புதுப்பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator