பிக்பாசில் நடிக்க வந்தது இதற்குத்தானாம்!

சென்னை:பிக்பாஸ்2ல் நடிக்கவந்தது ஏன் என்று நடிகைகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிக்பாஸ்2ல் பங்கேற்பாளர்கள் அறிமுகம் நேற்று நடைபெற்றது.
முதல்நபராக யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். அவர் கூறுகையில்,நான் 16 வயசுல துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தேன். அப்போது, எனது ஸ்கூலில் பிரபலமாகிவிட்டேன்.
பெற்றோர் அனைத்தையும் வெளிப்படையாக கூறி என்னை வளர்த்தனர்.
18 வயதுதான் ஆனாலும் அறிவு 24 வயது பெண் போல எனக்குள்ளது.
நான் யாரென்று எனக்கு தெரியும், என் குடும்பத்துக்கு தெரியும். மற்றவர்களுக்கும் என்னை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என நினைத்துதான் பிக்பாஸ் வந்தேன்” என யாஷிகா தெரிவித்துள்ளார்.நடிகை ஜனனி கூறியதாவது: ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் கூட அதிகபட்சம் முப்பது லட்சம் பார்வையாளர்களால் காணக்கூடிய சாத்தியம் உண்டு. இந்த நிகழ்ச்சியால் ஐந்து கோடி பார்வையாளர்களுக்கு அதிகமானோரை சென்றடைகிறோம். சின்னத்திரை வருங்காலத்தில் அடையக்கூடிய முக்கியத்துவத்தைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பே ஆருடம் சொன்னவர் கமல் என்றார்.நடிகை மும்தாஜ் கூறுகையில், நான் எதற்கு பிக்பாஸுக்கு வருகிறேன் என்று எனக்கே தெரியாது. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலையில்லை. ஒரு மாற்றம் வேண்டி வருகிறேன். கமலை தினமும் பக்கத்தில் பார்க்கலாம் என்றுதான் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றார்.நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா, தன் மீது எதிர்மறையாக உருவாகிவிட்ட பிம்பத்தை மகளுக்கு முன்னால் மாற்றிக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாககூறினார்.
இதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் மூன்றின் ஒரு பங்கை மகளுக்காகவும், இதர பங்குகளை பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் செலவிடுவேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here