Connect with us

india

மலைப்பாம்புடன் செல்பி! விபரீதத்தில் முடிந்த ஆசை!!

Published

on

மேற்குவங்காளம்:மலைப்பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட அதிகாரியின் முடிவு விபரீதமாகிவிட்டது.
மேற்குவங்காளம் மாநிலத்தில் உள்ள பைகுந்தாபூர் வனப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது.260கிலோ எடையும், 13அடி நீளமும் உடைய அம்மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
வனத்துறை அதிகாரி சஞ்சய் தத்தா அப்பாம்பை மாலைபோன்று தனது கழுத்தில் போட்டு புகைப்படம் எடுக்க விரும்பினார்.
அவ்வாறே புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அவரை சுற்றிலும் பலர் செல்பி புகைப்படங்களும் எடுத்தனர்.

திடீரென மலைப்பாம்பு சஞ்சய்தத்தாவின் உடலை சுற்றியது.
சுதாரித்துக்கொண்ட அவர் அதில் இருந்து விடுபட முயன்றார். அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள், மக்கள் ஆகியோர் சஞ்சய்தத்தா உடலை பாம்பு சுற்றவிடாமல் இறுக்கிப்பிடித்துக்கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator