நடிகர் பிரகாஷ் ராஜின் ’அணில் சேவை’!

சிக்கபள்ளாபுரா: குழந்தைகளின் கல்விக்காக அணில் சேவை செய்யவுள்ளேன் என்று தெரிவித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.  கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுராவில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகர் பிரகாஷ் ராஜ். அப்பள்ளிக்குழந்தைகளின் கல்விக்காக தான் உதவுவதாக தெரிவித்தார்.  பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுடன் கலந்தாலோசித்தார். வகுப்பறைகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் உரையாடினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இப்பள்ளியை நான் தத்தெடுத்துள்ளேன் என்று கூறமுடியாது. பள்ளியின் மேன்மைக்காக, மாணவர்கள் நலனுக்காக பல தனி நபர்கள், அமைப்புகள் சிறப்பாக பணியாற்றுகின்றன. அவற்றின் உதவியால் அரசுப்பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. அவர்களுக்கு அணில் உதவி நான் செய்துவருகிறேன்.
பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் சிறப்புப்படையினர் விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிவில் கொலைகாரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். ஆனால், சமுதாயம் மற்றொரு கவுரி, மற்றொரு கொலை என்று கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேட்டியில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here