காரைக்காலில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது!

காரைக்கால்: கடந்த 14 -ஆம் தேதி மாலை காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்களில் பலர் நேற்று கரை திரும்பினர். விசைப் படகு ஒன்றில் பெரிய அளவிலான சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது.இதுகுறித்து படகில் வந்த மீனவர்கள் கூறும்போது, சனிக்கிழமை காலை போடப்பட்ட தூண்டில் வலையில் அதிக எடைகொண்ட சுறா மீன் சிக்கியது. அதை படகிலிருந்த 6 பேர் சேர்ந்து தூக்கி படகினுள் போட்டு கரைக்கு கொண்டு வந்தோம்.இது 6 அடி நீளத்தில், ஒன்றரை அடி அகலம் கொண்டதாக உள்ளது. 130 கிலோ எடைகொண்டதாக இருக்கிறது. சுறா மீனின் இறக்கை மருத்துவ குணம் கொண்டதால், இறக்கை பகுதியை வெட்டி முகவரிடம் விற்றுவிடுவோம். இது பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு மருந்துகள் தயாரிப்புக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.இறக்கை மட்டும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கமுடியும். சிறிய அளவிலான சுறா மீன்களை மட்டுமே மக்கள் உணவுக்காக வாங்கிச் செல்கின்றனர். இது கிலோ 300 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என்றனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது தான் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here