கணவருக்கு ‘கட்’செய்ய முயன்ற மனைவி கைது!

மத்தியப்பிரதேசம்:கணவரின் பிறப்புறுப்பை துண்டிக்க கூலிப்படையை அமர்த்திய மனைவியின் செயல் கொலையில் முடிந்தது.
ஜபல்பூரை சேர்ந்த டாக்டர் ஷபாதுல்லா. இவர் மனைவி ஆயிஷா. இத்தம்பதிக்கு 14வயதில் பெண் குழந்தை உள்ளது.பல பெண்களுடன் தொடர்புவைத்துக்கொண்டு மன்மதராஜாவாக வலம் வந்தார் ஷபாதுல்லா.
இந்நிலையில், தனது மகளிடமே சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனை பொறுக்கமுடியாத ஆயிஷா கூலிப்படையை அமர்த்தி கணவரின் பிறப்புறுப்பை துண்டித்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த ஞாயிறு அன்று ஷபாதுல்லா வீடு திரும்பும்போது மின்சாரத்தை நிறுத்தி இருட்டில் அவரை சேதப்படுத்த கூலிப்படை திட்டமிட்டது.ஆனால், கூலிப்படையை சேர்ந்தவர் கத்தியால் குத்தியதில் ஷபாதுல்லா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிய ஆயிஷா, பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதானார்.
கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here