இப்போ விட்றுங்க….அப்புறம் வெச்சு செய்யுங்க!!

சென்னை:திருநங்கைகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகை கஸ்தூரி.
18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டுமுன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநங்கைகள் மனதை பாதிக்கும் வகையில் அமைந்திருந்த அக்கருத்தை நீக்கிய அவர் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், வேடிக்கையாக பேசுவதாக நினைத்து ரொம்ப தப்பான கருத்தை டுவிட்டரில் தெரிவித்துவிட்டேன்.அதனால் என்னுடைய சகோதரசகோதரிகள், நண்பர்கள் மனது வேதனை அடைந்தனர் என்று தெரிந்துகொண்டேன். உடனே அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன்.
பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளேன்.
எனது ஓரினஈர்ப்பு நண்பர்களிடம் நேரடியாகவே வருத்தம், வேதனையை தெரிவித்துள்ளேன்.
ஆனால், அதை விஷமத்தனமாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து மீண்டும் மீண்டும் பதிவுசெய்கின்றனர்.இது எனது சகோதர சகோதரிகளை கொச்சைப்படுத்தி காயப்படுத்தும் செயலாகும்.
நான் தவறு செய்கிறவள்தான். மீண்டும் ஒரு தவறு செய்யும்போது என்னை கேள்விகேளுங்கள். தற்போது நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளேன். இப்பிரச்சனையை இத்துடன் விட்டுவிடுங்கள்.
இவ்வாறு விடியோவில் நடிகை கஸ்தூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here