இலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை!

கொழும்பு:இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியதீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளும் 3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றன.முதல்போட்டியில் இலங்கை தோற்றது. 2வது போட்டியின் முதல் இன்னிங்சில் 253ரன்களுக்கு இலங்கை ஆல்.அவுட்டானது.
ஆட்டத்தின் போது இலங்கை வீரர் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் கொண்டனர்.
பந்தைமாற்ற அவர்கள் முடிவெடுத்தனர். இதற்கு இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பேச்சுவார்த்தை நடைபெற்று மேற்கு இந்திய தீவு அணிக்கு 5ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டு போட்டிதொடர்ந்தது.
இந்நிலையில்,பந்தை சிதைத்தற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தண்டனை வழங்கப்படும் அறிவித்துள்ளது.
இது லெவல் 2 வகைக் குற்றம் என்பதால் சந்திமலுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here