ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு இழப்பு! நிதிஆயோக்கில் முதல்வர் பேச்சு!!

டெல்லி:பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 4வது நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு விபரம்:தமிழகம் நிதிப்பொறுப்பு மிக்க மாநிலம் ஆகும். ஜிஎஸ்டி அறிமுகமான பின்னர் மாநிலங்கள் நிதிதிரட்டும் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய மாநில நிதிப்பகிர்வு குறித்து புதிய மாற்றங்கள் அவசியமாகிறது.
வளர்ந்த நாடுகளில் கூடுதல் வரி(லெவி), மறைமுகவரிகள் மாநில அரசுகளே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.நிதிவசூலிக்கும் அதிகாரம்,வருமானவரியில் குறிப்பிட்ட சதவீதமும் மாநிலங்கள் வைத்துக்கொள்கின்றன.
மாநிலங்களின் நிதித்தேவையை கருத்தில்கொண்டு மத்திய அரசு இதனை பரிசீலிக்க வேண்டும். மாநில வளங்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்.14வது நிதிக்கமிஷனின் திருத்த நடவடிக்கைகளால் தமிழகத்துக்கு 6ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைகளும் தமிழகத்துக்கு கூடுதல் நிதிச்சுமை தருவதாக உள்ளது.
மேலும், நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 2011மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தையும் நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை அமைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை உருவாக்கி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமலாக்க வேண்டும்.
நதிகள் தேசியமயமாக்கி அவற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இதனால் மாநிலங்கள் இடையே தண்ணீர் உபயோகம் போதிய அளவுக்கு மாநிலங்களுக்கு இடையே இருக்கும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மகாநதி-கோதாவரி, கிருஷ்ணா-பெண்ணார்-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கவேண்டும் என்று வலியுறுத்திவந்தார். பம்பாநதி, அச்சன்கோவில் ஆற்று கூடுதல் நீரை வைப்பாறுக்கு கொண்டுவரவும் ஆலோசனைகள் கூறினார். அதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here