நோ பாலிடிக்ஸ்! ரஜினி திடீர் முடிவு!!

சென்னை: திரைப்படங்களில் அரசியல் நெடு துளிகூட இடம்பெறக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார்.
தனிக்கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார் ரஜினி.
இந்நிலையில் காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.இமயமலைப்பகுதியில் தொடர்ந்து 40நாட்களில் படத்தை முழுவதும் ஷூட்டிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலா தொடர்பான விபரங்களை தினமும் கேட்டு வருகிறார் ரஜினி.
வசூலில் திருப்தியாக நகரங்களில் இருக்கும் இப்படம், பி, சி செண்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.இதனால் தனது அரசியல் பஞ்ச்களை இனிவரும் படங்களில் தவிர்க்க முடிவெடுத்துள்ளார் ரஜினி.
அரசியல் நெடியே இல்லாமல் புதிய படத்தை செய்யலாம் என்று இயக்குநரிடம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here