மோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி!

டெல்லி:பிரதமர் மோடிக்கு ‘ஐஸ்’வைத்து நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
நிதிக்கமிஷன் கலைக்கப்பட்டு நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அதன் 4வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.
அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ‘விஷன் தமிழ்நாடு 2023’ திட்டம் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச்24, 2012ல் துவக்கப்பட்ட இத்திட்டத்தில் மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுவது, தமிழக வளர்ச்சி குறித்து அனைத்து விஷயங்களும் அளவிடப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. சிறந்தநிர்வாகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுக்கு உதாரணமாக இத்திட்டம் திகழ்கிறது.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் சமூகம், கலாச்சாரத்தால் வேறுபட்டுள்ளது. அவர்களது மேம்பாட்டுத்தேவையும் வேறுபட்டுள்ளது. எனவே, மாநில மக்களின் தேவையை கருத்தில்கொண்டு திட்டங்கள் வடிவமைக்கப்படவேண்டும்.இந்தியாவின் மேம்பாட்டு திட்டம்2022 மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டதாகவும், எளிதாக அணுகுவதாகவும், மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திரமோடியின் சிறப்பான தலைமையில் இத்திட்டம் நிச்சயம் சாத்தியமாகும்.மாநிலங்களின் நிதிதிரட்டும் சக்தி எப்படிப்பட்டது என்று இந்திய அரசில் யாரையும் விட பிரதமருக்குத்தான் நன்கு தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here