மழைவெள்ளத்தால் பயிர் சேதம்! விவசாயி தற்கொலை முயற்சி!!

மைசூர்: மழைவெள்ளத்தில் பயிர்மூழ்கியதால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கபினி அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கபிலாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரைகளில் உள்ள விளைநிலங்களை நீர் சூழ்ந்துள்ளது.நஞ்சண்கூடு குப்பரவள்ளி கிராமத்தில் 5ஏக்கர் நெல்வயல் நீரில் மூழ்கியதால் விவசாயி மனமுடைந்தார்.
நதியில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்குவந்த இரு விவசாயிகள் காப்பாற்றி அழைத்துவந்தனர்.
கபினி அணையில் நீர்திறக்கப்பட்டதாலும், மழையாலும் நஞ்சண்கூடு தாலுகாவில் உள்ள 50ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here