மார்பளவு வெள்ளத்தில் நீந்தி மக்களை மீட்ட அதிகாரி!

மணிப்பூர்: மார்பளவு தண்ணீரில் இறங்கி வெள்ளமீட்பு பணியில் ஈடுபட்டார் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
பருவமழை கொட்டிவருவதால் வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மணிப்பூரில் முக்கியநதிகளான நம்பால், தூபல், கொவய் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக இடம் மாற்றப்பட்டுள்ளனர். மழைவெள்ளத்துக்கு 6பேர் இறந்துள்ளனர். 1.5லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளமீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஈடுபட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளும் அவர்களுக்கு உதவிசெய்துவருகின்றனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் திலீப்சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி மார்பளவு நீரில் இறங்கி மக்களை இடம்மாற்ற உதவினார்.
இதுகுறித்த விடியோ வைரலாகி வருகிறது. திலீப்சிங்கை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here