வேலூர்:மாம்பழ லாரி 70அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 9தொழிலாளர்கள் இறந்தனர்.
வேலூரை அடுத்த கள்ளரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 32 பேர் லாரியில் மாம்பழம் பறிக்க சென்றனர்.
ஆந்திர மாநிலம் நாயனூர் கிராமத்தில் மாங்காய் பறித்து அதை லாரியில் ஏற்றி அதே லாரியில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
கங்குந்தி வனப்பகுதியில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 70 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் கூலித்தொழிலாளர்கள் 4 பெண்கள் உட்பட 9 பேர் இறந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
குப்பம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்த 26 பேரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சைபெற்றுவரும் 7பேரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது.
கல்லூரியில் சேர்வதற்கு கட்டணம் செலுத்துவதற்காக மாங்காய் பறிக்க சென்ற மாணவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.