ஒகேனக்கல்லில் வெள்ளம்!! அருவியில் குளிக்க தடை!!

தர்மபுரி:ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகள் வேகமாக நிரம்பின.
கபினி அணையிலிருந்து உபரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது.
இந்த நீரானது தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தது.நீர்வரத்து விநாடிக்கு 15ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
காவிரியில் வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல் அருவிகள் தண்ணீர் சீறிக்கொண்டு விழுகிறது.
நடைபாதை, தொங்குபாலத்தை நீர்ப்பெருக்கு மூழ்கடித்துள்ளது. எனவே பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுளது.
பரிசல் பயணத்துக்கும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளன.
இந்நிலையில், கபினியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here