முஸ்லிம் நண்பர்கள் தொழுகை! குடைபிடிக்கும் இந்து வாலிபர்கள்!!

சென்னை: முஸ்லிம் நண்பர்கள் தொழுகை செய்யும்போது அவர்கள் நனையாமல் குடைபிடித்து நின்றனர் இந்து சகோதரர்கள்.

வேலூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மைதானம் ஒன்றில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் வாலிபர்கள் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது மழை வருகிறது. உடனடியாக அங்கிருந்த இந்து நண்பர்கள் தார்பாலின் ஷீட் ஒன்றை குடையைப்போன்று இணைந்து பிடிக்கின்றனர்.
தொழுகை முடிந்த பின் தங்களை பாதுகாத்த நண்பர்களை முஸ்லிம் இளைஞர்கள் கட்டித்தழுவி நன்றி கூறினர். மதச்சார்பின்மை, பாசப்பிணைப்புடன் தமிழக இளைஞர்கள் நடந்துகொண்ட இச்சம்பவம் நெகிழ வைப்பதாக உள்ளதென வலைமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here