நக்சலைட்டை ஆதரிக்கும் 4முதல்வர்கள்!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் ஒரு நக்சலைட். மோசடிபேர்வழி. அவருக்கு 4மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என சாடியுள்ளார் சுபிரமணியன்சுவாமி.டெல்லி தலைமை செயலாளரை ஆம்.ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கினர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கமறுக்கின்றனர்.
அவர்களை பணிக்கு திரும்ப உத்தரவிடவேண்டும். வீடுதேடிச்செல்லும் ரேசன்பொருள் திட்டத்துக்கு ஒப்புதல் தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஆளுநர் பைஜாலை சந்திக்க கேஜரிவால் ராஜ்பவன் சென்றார்.அவரை சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டதால் ராஜ்பவனில் உள்ளிருப்பு போராட்டத்தை ஒருவாரமாக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஆதரவாக மேற்குவங்கமுதல்வர் மம்தாபானர்ஜி, ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி கருத்துதெரிவித்தனர்.
கேஜரிவாலை சந்திக்க இவர்கள் 4பேருக்கும் அனுமதிமறுக்கப்பட்டது.
பிரதமரை நிதிஆயோக் கூட்டத்தில் சந்தித்த இவர்கள் டெல்லி விவகாரத்தில் தலையிட்டு சுமுக தீர்வுகாணவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை பாஜக தலைவர் சுப்பிரமணியன்சுவாமி கண்டித்துள்ளார்.ஒரு மாநிலத்தில் முதல்வராக பதவிப்பிரமானம் எடுத்த அரவிந்த் கேஜ்ரிவால் செய்யும் செயல்கள் அனைத்தும் மோசமாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கிறது.
ஊழலுக்கு எதிரான அமைப்பைத் தொடங்கி, அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் இணைந்து, பின்னர் அவரையே துரத்திவிட்டார் கேஜ்ரிவால். அரவிந்த் கேஜ்ரிவால் பிறவியிலேயே ஒரு நக்சலைட். இவருக்கு 4 முதல்வர்களும் ஏன் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
கூட்டாட்சி அமைப்பின் அர்த்தம் இந்த 4 முதல்வர்களுக்கும் தெரியுமா. அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு படிக்காதவர், அவருக்கு ஒன்றும் தெரியாது.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here