மும்பை வீதியில் கோலி-அனுஷ்கா பிரச்சாரம்!

மும்பை:தூய்மை இந்தியாவுக்காக நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் விராட்கோலியும், அவரது மனைவி அனுஷ்காஷர்மாவும்.மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் நாட்டை துப்புரவாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இத்திட்டத்துக்கு விராட்கோலி உள்ளிட்ட பலரும் விளம்பர தூதர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கோலியும், அவர் மனைவியும் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் அருகே வந்த காரில் இருந்த ஒருவர் சாலையில் குப்பையடங்கிய பிளாஸ்டிக் பையை நடுரோட்டில் வீசினர்.இதனை பார்த்த அனுஷ்கா அந்நபரிடம் சண்டைக்கு சென்றார்.
பிளாஸ்டிக் குப்பையை நடுவீதியில் வீசலாமா?
குப்பைத்தொட்டியை உபயோகியுங்கள் என்று அந்நபரிடம் கூறுகிறார்.
இதனை படமெடுத்த விராட்கோலி தனது டுவிட்டரில் வெளீயிட்டுள்ளார்.
இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க விழிப்புணர்வை அனைவருக்கும் பரப்புங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here