காதலிக்க மறுத்த பெண் படுகொலை! இளைஞர் வெறிச்செயல்!!

தெலுங்கானா: ரக்ட்சா பட்டதாரியான இவர் தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் ராமகுண்டம் பகுதியை சேர்ந்தவர். கரீம் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மீ சேவா அலுவலகத்தில் வேலையில் செய்து வந்தார்.வம்சிதர், ராமகுண்டம் மார்க்கண்டேய நகரை சேர்ந்தவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக ரக்ட்சாவை காதலித்து வந்துள்ளார். வம்சிதரின் காதலை ரக்ட்சா ஏற்க மறுத்து விட்டார்.காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு வம்சிதர் வந்துள்ளார். ரக்ட்சாவிடம் தன்னை காதலிக்க வலியுறுத்தி தகராறில் செய்துள்ளார். அவரை கடைக்கு வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்துள்ளார். இருவருக்கும் தீவிர வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் வம்சிதர் கத்தியால் ரகக்ஞாவின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து அலறியுள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ரக்ட்சாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் வம்சிதரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here