விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும்! இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு!!

இங்கிலாந்து: விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாகவும் நீதிமன்றம் அறிவித்தது.விஜய் மல்லையா லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி இங்கிலாந்து நீதீமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்துள்ளது. சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார்.நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. இந்த உலகளாவிய உத்தரவையும், கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் இங்கிலாந்தில் பதிவு செய்த வழக்கு செலவுக்காக, இந்திய வங்கிகளுக்கு விஜய் மல்லையா 1 கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here