மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை! மனைவியை நீதிமன்றத்தில் கொலை செய்த கொடுமை!!

கவுகாத்தி: பூர்ணா நஹர் தேகா, அஸ்ஸாம் திப்ருகர் மாவட்டத்தை சேர்ந்தவர். ரிதா இவரின் மனைவி. இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக ரிதா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேகாவை சிறையில் அடைத்தனர்.9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்தார்.முன்பு பெயிலில் வந்தார். இந்த வழக்கு மீ்ண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.ரிதா நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அங்கு வந்த தேகா மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்தவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் ரிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here