பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு! எடைக்கு போட்ட தபால்காரர்!!

ஜெய்ப்பூர்: 1830 ஆதார் கார்டுகள் பழைய பேப்பர் கடையில் கிடந்த விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில போலீசார் தபால்காரர் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜாலாபூரா நகரில் உள்ள பழைய பேப்பர் கடை உள்ளது. அங்கு வந்த பழைய பேப்பர் மூட்டையை உரிமையாளர் பிரித்துள்ளார். கட்டுக்கட்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.போலீசாரிடம் ஆதார் கார்டுகள் ஒப்படைக்கப்பட்டன. விசாரணையில் ஜாலாபூரா பகுதியைச் சேர்ந்த தபால்காரர் சதீஷ்குமார் என்பவர் கார்டுகளை உரியவர்களிடம் கொடுக்காமல் பழைய பேப்பர்களுடன் ஆதார் கார்டை எடைக்கு போட்டது தெரிய வந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதீஷ்குமார் பணியில் இருந்து நீக்கியுள்ளனர். ஆதார்கார்டுகளை உரியவர்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தபால்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here