ரிலையன்ஸ் நிறுவனத்தில் 48,600 பேர் வெளியேற்றம்!

மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமானது. தொலைத் தொடர்பு சேவைகளை 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வழங்கத் தொடங்கியது.இந்நிறுவனம் நாளடைவில் கடும் வருவாய் இழப்பைச் சந்திக்கத் தொடங்கியது. பெரும் கடன் சுமைக்கும் ஆளானது. தனது சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பிறகு ஏற்பட்ட கடும் போட்டியால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தொழில் முடங்கியது.இதனால், 2017 டிசம்பர் மாத இறுதியில் தனது 2ஜி, 3ஜி மற்றும் அழைப்புச் சேவைகளை முற்றிலும் நிறுத்துவதாக அறிவித்தது. ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 4ஜி சேவைகளை மட்டும் தற்போது வழங்கி வருகிறது.அந்நிறுவனத்தில் மொத்தம் 52,000 பேர் வரையில் பணியாற்றி வந்தனர். தற்போது அதில் 94 சதவிகிதம் அளவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.46,000 கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here