பாண்டிச்சேரி முதலமைச்சருக்கான கடிதங்கள்! முன்னாள் முதலமைச்சர் வீட்டிற்கே டெலிவரி!!

பாண்டிச்சேரி: பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி. தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி. மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டு முகவரிக்கே செல்வதாக புகார் எழுந்துள்ளது.விநாயகர் கோயில் தெரு, திலாசுபேட், புதுச்சேரி 9 என்ற முகவரியில் உள்ள ரங்கசாமியின் வீடு தான் அவர் ஆட்சியில் முதலமைச்சர் அலுவலகமாக இருந்தது.தற்போது நாராயணசாமி முதலமைச்சராக உள்ள நிலையில் அவருக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் அனைத்தும் ரங்கசாமியின் வீட்டு முகவரிக்கே செல்கிறது.துறைகளுக்கான வாரிய தலைவர்களை நியமிப்பதற்கான சில விளக்கங்களைக் கேட்டு மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து வந்த பதில் கடிதம் ரங்கசாமியின் வீட்டிற்கே அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஆயோக்கில் இருந்து ரங்கசாமியின் வீட்டிற்கே கடிதம் சென்றுள்ளதாக முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here